‘அவங்க பானைய உடைச்சுதிலுருந்துதான் பிரச்சனை ஆச்சு’.. கொதிக்கும் விசிக தொண்டர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேர்தல் களத்தில் நடந்த சோகம்தான், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருவேறு சமூகத்தினரிடையே நிகழ்ந்த மோதலால், விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் போராட்டம் செய்துவருகின்றனர்.

‘அவங்க பானைய உடைச்சுதிலுருந்துதான் பிரச்சனை ஆச்சு’.. கொதிக்கும் விசிக தொண்டர்கள்!

இந்திய தேசிய ஜனநாயக பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று மாலை அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில், பாமக மற்றும் விசிக கட்சியினருக்கிடையே நிகழ்ந்த மோதலில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டதும், 10க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி விகடன் இதழுக்கு பேட்டி தந்துள்ள விசிகவினர், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திருமாவளவனின் பெயரை வேட்பாளராக அறிவித்தது முதலே, பாமகவினர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாகவும், தேர்தல் அன்று காலை திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை முன்னிறுத்தி, கடைகளில் பானை வைத்திருந்ததை பார்த்த வன்னியர் சமூகத்தினர் தங்கள் மீது வன்முறையில் ஈடுபடும் விதமாக பானையை உடைத்ததாகவும் அதில்தான் பிரச்சனை தொடங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த கலவரத்தில் ஈடுபட்டோரைக் காப்பாற்றவே அதிமுகவினரும், போலீஸாரும் முற்படுவதாகவும் விசிக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே இந்தத் தாக்குதலில் காயமடைந்தோர்களை மருத்துவமனைக்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பார்வையிட்ட பின்னர், புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, பொன் பரப்பில் கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.