'முரட்டு சிங்கிள்ஸ்' ப்ளீஸ் இத படிக்காதீங்க'... 'கொரோனா'வால் ஓசூர் ரோஜாவுக்கு அடித்த ஜாக்பாட் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலர் தினத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், முரட்டு சிங்கிள்ஸ் பலரும் தங்களது புலம்பலை ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சத்தமில்லாமல் ஓசூர் ரோஜா உலக அளவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் இதனைக் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்து இருக்கிறதா என, முரட்டு சிங்கிள்ஸ் பலர் புலம்புவதும் கேட்கத்தான் செய்கிறது.

'முரட்டு சிங்கிள்ஸ்' ப்ளீஸ் இத படிக்காதீங்க'... 'கொரோனா'வால் ஓசூர் ரோஜாவுக்கு அடித்த ஜாக்பாட் !

காதலர் தினத்தில் காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்த ரோஜா பூக்கள் கொடுப்பது வழக்கம். அதுவும் ஓசூரில் விளையும் ரோஜாக்களுக்கு உலகம் முழுவதும் தனி மார்க்கெட் தான். ஓசூரில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண தட்ப வெப்பத்தைப் பயன்படுத்தி சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக ஓசூர், பேரிகை, கெலமங்கலம், பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மலர் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

காதலர்களுக்கு மிகவும் பிடித்த சிவப்பு ரோஜா மலர்கள் ஓசூரில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் தாஜ்மஹால், டட்ரா, மெட்ரா, ரோப்லஸ் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் 2 நாட்கள் குளிர்சாதன அறைகளில் வைத்துப் பதப்படுத்தி லாரிகள் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருந்து விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து ரோஜா மலர்கள் வந்தாலும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் வளைகுடா நாடுகளில் ஓசூர் ரோஜாவிற்கு எப்போதுமே தனி மவுசு தான். இதுகுறித்து பேசிய விவசாயி ஒருவர், '' ஓசூரில் மட்டும் 2 கோடி ரோஜா மலர்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சீன ரோஜா மலர்களின் வருகையால் இந்திய ரோஜா மலர்களின் விலை ஒரு பஞ்ச் ரூ.100 தான் விற்பனை ஆனது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால், அங்கிருந்து மலர்கள் இறக்குமதி செய்யப்படவில்லை.

இதன்காரணமாக இந்த ஆண்டு ஒரு பஞ்ச் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கோவை, கேரளா, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்கும் விமான மூலம் ரோஜா அனுப்பி வைக்கப்பட இருப்பதாக'' அவர் கூறியுள்ளார். அப்புறம் என்ன காதலர் தினம் கொண்டாட போற உங்க பிரண்ட்ஸை Tag பண்ணி, என்ன ரோஜா பூவுக்கு ஆர்டர் கொடுத்தாச்சான்னு கேளுங்க பாஸ்.

HOSUR ROSES, VALENTINE’S DAY, ROSE EXPORTERS