ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிரபல புத்தகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.
Also Read | விராட் கோலிக்கு ICC கொடுத்த அங்கீகாரம்.. கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்.. இதுதான் விஷயமா?
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். வட்டார வழக்கில் எழுதப்பட்ட இந்த நாவல் தமிழ் இலக்கிய உலகில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் பெரும்பான்மையான பதிப்புகளையும் கண்டது. வகை நீர் பிடிப்பு பகுதிக்குள் வசித்துவந்த மக்கள் தான் இந்த நாவலின் மையம். அவர்களுடைய வாழ்க்கையை வலியோடு சொன்ன படைப்பு கள்ளிக்காட்டு இதிகாசம்.
கடந்த 2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற இந்த நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி மொழிபெயர்த்து வருகிறது. இந்தி - உருது -மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது. இதனை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார்.
துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ (The Saga of the Cactus Land) என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான் ஆகியோர் இந்த மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
Also Read | கோவை TO கேரளா.. சைக்கிள்ல போய் தாலி கட்டிய மாப்பிள்ளை.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு அசந்துபோன உறவினர்கள்..!
மற்ற செய்திகள்