'இதெல்லாம் எனக்கு பத்தாது'... 'இன்னும் கொஞ்சம் தாங்க'... ‘வாதம் செய்த வைகோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேசத் துரோக வழக்கில் நீதிபதி தனக்கு அளித்த தண்டனை பத்தாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

'இதெல்லாம் எனக்கு பத்தாது'... 'இன்னும் கொஞ்சம் தாங்க'... ‘வாதம் செய்த வைகோ'!

கடந்த 2009-ல் புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  வைகோ மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என  சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

தண்டனையை இன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததையடுத்து,  ரூ.10 ஆயிரம் அபராதமும், ஒரு ஆண்டு  சிறை தண்டனையும் வைகோவுக்கு விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இருந்தும், 'தீர்ப்பில் உள்ள வாசகத்தில் பிழை உள்ளது, எனவே தனக்கு அதிகப்பட்ச தண்டனையை வழங்க வேண்டும்' என நீதிபதியிடம் வைகோ, மீண்டும் கோரிக்கை வைத்தார். 'குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நான் ஒரு போதும் கோரவில்லை' என்றார்.

வைகோவின் கோரிக்கையை ஏற்று, தண்டனையை ஒருமாத காலத்திற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இதற்குப் பின்னர் பேசிய வைகோ, ‘ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை’ என அவர் கூறினார்.

VAIKO, MDMK, SPECIALCOURT, SEDITIONCASE