'எது... தமிழ்நாட்டை பிரிப்பதா'?.. 'கொங்கு நாடு' சர்ச்சை குறித்து... நடிகர் வடிவேலு 'அவரது' ஸ்டைலில் சொன்ன 'பதில்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'கொங்கு நாடு' சர்ச்சை குறித்த கேள்விக்கு நடிகர் வடிவேலு தனது பாணியிலேயே பதிலளித்திருப்பது வைரலாகி வருகிறது.

'எது... தமிழ்நாட்டை பிரிப்பதா'?.. 'கொங்கு நாடு' சர்ச்சை குறித்து... நடிகர் வடிவேலு 'அவரது' ஸ்டைலில் சொன்ன 'பதில்'!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் வடிவேலு, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகமே உற்றுநோக்கும் வகையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒன்றரை மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தியதோடு, தகுந்த நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்ததாக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த வடிவேலு, இது மக்களுக்கான பொற்கால ஆட்சி என்று கூறினார்.

இறுதியாக, தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தனக்கே உரிய பாணியில், "தமிழ்நாட்டிலேயே ராம்நாடு இருக்கு, ஒரத்தநாடு இருக்கு, நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும் என்றார். இப்படி பிரித்துக்கொண்டே போனால் என்னாவது? இதெல்லாம் கேட்டாவே தலையெல்லாம் சுத்துது" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

 

மற்ற செய்திகள்