“தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி... வெகு விரைவில் துவங்க இருக்கிறது தமிழக அரசு..!” - ஊசி போடும் ‘தேதியுடன்’ விவரங்களை அறிவித்த சுகாதாரத்துறை!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தமிழகத்தில் செய்யப்பட இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா உட்பட நான்கு மாநிலங்களில் ஏற்கனவே தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி இரண்டாம் தேதி முதல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்துவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட ஒத்திகை நடத்தப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்