“நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு.. வர்றீங்களா?”.. ஃப்ரண்டுக்கு ‘ஃபேஸ்புக்கில் ஆபாச மெசேஜ்!’.. சபலிஸ்ட் வாலிபருக்கு ‘பாடம்’ புகட்டிய ‘சிங்கப்பெண்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கணவர் மற்றும் இரண்டு மகன்கன்களுடன் வசித்து வரும் இவரை, திண்டுக்கல்லைச் சேர்ந்த இவரது தோழி ஒருவர், அணுகியுள்ளார். அப்போது அந்த தோழி, தேனியைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் தனக்கு ஃபேஸ்புக் வழியாக ஆபாச மெஸ்ஸேஜ் செய்து தொல்லை கொடுப்பதாக வந்து ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தான், ஃபேஸ்புக்கில் தனக்கு தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை துணிச்சலாக ராஜேஸ்வரி மிக லாவகமாக போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார். இதனால் தனக்கு முகநூலில் ஆபாச புகைப்படத்தை அனுப்பி தொல்லை கொடுக்கும் இளைஞர் பற்றி ராஜேரிவரியிடம் அந்த திண்டுக்கல் தோழி கூறியுள்ளார்.
தோழியின் பிரச்சனையை தீர்த்துவைக்க களமிறங்கிய இராஜேஸ்வரி, சம்மந்தப்பட்ட பிரச்சனைக்குரிய அந்த இளைஞரின் ஆர்டிஸ் பாண்டி என்கிற முகநூல் ஐடிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த இளைஞரும் வழிந்துகொண்டே தனது பாணியில் ஆபாச மெசேஜ்களை ராஜேஸ்வரிக்கு அனுப்ப, ராஜேஸ்வரியோ அந்த இளைஞரை நேரில் பார்க்க வேண்டும் என மெசேஜ் அனுப்பி தன் ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். ராஜேஸ்வரியை சந்திக்க வந்த அந்த இளைஞரை கையும் களவுமாக, தனது கணவர், தாயார் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ராஜேஸ்வரி பிடித்துள்ளார்.
எனினும் அந்த இளைஞர் ‘தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்’ என அனைவரது காலிலும் விழுந்து கதறியுள்ளார். அப்போது தான் பிடிபட்ட அந்த இளைஞருக்கு தர்ம அடியைப் போட்டு, உண்மையை வாங்கியுள்ளனர். அதன்படி அந்த இளைஞர் தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அத்துடன் அவருடைய செல்போனை பரிசோதித்து பார்த்தபோது அவர் முகநூல் வழியாக பல பெண்களுக்கு இப்படி ஆபாச படங்கள் அனுப்பி கைவரியைசைக் காட்டுவதையே வேலையாகக் கொண்டு வந்துள்ளார் என தெரியவந்தது.
ஆனால், அவரை போலீஸில் ஒப்படைக்காமல், தர்ம அடியுடன் விட்டுவிட்டனர். எனினும் ராஜேஸ்வரியின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்