'சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்'... 'மீண்டும் சென்னை வருகிறார் அமித் ஷா'... சென்னை விசிட்டில் இருக்கும் அதிரடி பிளான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ஆம் தேதி சென்னை வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அதிகாரமாக்கத் தலைவராக உள்ளார். கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் அமித் ஷாவின் கண்ணசைவுக்கு ஏற்றவாறே நடக்கிறது. இதனிடையே கடந்த நவம்பர் 21ம் தேதி அமித் ஷா சென்னை வந்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி என உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமித் ஷா மீண்டும் வரும் 14-ஆம் தேதி சென்னை வருகிறார்.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க அமித் ஷா சென்னை வர உள்ள நிலையில், வரும் தமிழகச் சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுக- பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அமித் ஷா சென்னை வருகையின்போது, நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் கட்சி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலுக்கு வர மாட்டேன் என அதிரடியாகத் தனது முடிவை அறிவித்து விட்டர். இருப்பினும் ரஜினிகாந்த்தை அமித் ஷா சந்தித்து தமிழகச் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கேட்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே அமித் ஷாவின் சென்னை வருகை தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்