‘கர்ணன் பார்த்தேன்’!.. ‘அந்த தவறை 2 நாட்களில் சரி செய்றோம்னு சொல்லிருங்காங்க’.. உதயநிதி பரபரப்பு ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கர்ணன் திரைப்படத்தில் உள்ள தவற்றை சுட்டிக் காட்டியுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

‘கர்ணன் பார்த்தேன்’!.. ‘அந்த தவறை 2 நாட்களில் சரி செய்றோம்னு சொல்லிருங்காங்க’.. உதயநிதி பரபரப்பு ட்வீட்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த 9-ம் தேதி திரைக்கு வந்த இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

Udhayanidhi Stalin tweet about Karnan movie factual mistake

இந்நிலையில் 1997-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது கொடியன்குளம் கலவரம் நடந்ததாக கர்ணன் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றை திரித்து கூறும் செயல் என்றும் சிலர் கருத்து தெரிவித்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

Udhayanidhi Stalin tweet about Karnan movie factual mistake

இதுகுறித்து ட்வீட் செய்த திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ‘கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், தயாரிப்பாளர் அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997-ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி’ என  உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்