"தர்மசங்கடம் வேணாம்".. கட்சியினருக்கு உதயநிதி கோரிக்கை.. அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கழக உறுப்பினர்கள் யாரும் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தர்மசங்கடம் வேணாம்".. கட்சியினருக்கு உதயநிதி கோரிக்கை.. அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

Also Read | கார்ல போறப்போ ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட ஆசாமி.. வைரலான வீடியோ.."தப்பு பண்ணலாம்னு நெனச்சா"..போலீஸ் போட்ட தெறி ட்வீட்...!

அமைச்சர் பதவி

சமீபத்தில் திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Statement about Minister Post

அறிக்கை

தனக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"எனக்கு அமைச்சர் பொறுப்பு வேண்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் நன்றிக்குரியவனாக இருப்பேன். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், இளைஞரணி அணிச் செயலாளராகவும் கட்சிப் பணிகளையும் இயன்றவரை சிறப்பாக ஆற்றி வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Statement about Minister Post

கழகத்தை வளர்ப்போம்

தொடர்ந்து கழகத்தை வளர்க்க உழைக்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,"கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலதிட்டப் பணிகளில் ஈடுபடுவது என பல பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன். இந்தச் சூழலில் என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாமும் அனைவருமே அறிவோம். எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்க்க உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றுவோம். கட்சிக்கும் அரசுக்கும் மகத்தான புகழை சேர்த்திடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Statement about Minister Post

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தவேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Also Read | அதிகாரி கொடுத்த சிக்னல்.. ஒரே நேரத்துல டேக்-ஆஃப் ஆன 2 விமானங்கள்.. கொஞ்சநேரத்துல பரபரப்பான கண்ட்ரோல் ரூம்..

UDHAYANIDHI STALIN, UDHAYANIDHI STALIN STATEMENT, MINISTER POST, உதயநிதி ஸ்டாலின்

மற்ற செய்திகள்