சட்டசபைல சட்டுன்னு எந்திரிச்சு உதயநிதி வச்ச கோரிக்கை.. கவனமா கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. ஓ. இது நல்ல ஐடியாவா இருக்கே.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சட்டசபைல சட்டுன்னு எந்திரிச்சு உதயநிதி வச்ச கோரிக்கை.. கவனமா கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. ஓ. இது நல்ல ஐடியாவா இருக்கே.!

சட்டசபை

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மே 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் தற்போது சூடு பிடித்துள்ளன. இதனிடையே இன்று சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று சமூக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திருநங்கையர் நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

Udhayanidhi stalin spoke about Transgenders in TN Assembly

அப்போது பேசிய உதயநிதி," 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உதவி தொகை அனைத்து  திருநங்கைகளுக்கும் வழங்கப்படவேண்டும். திருநங்கைகள் அனைவரும் ஆதரவற்றவர்கள் எனக் கருதி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த உதவி கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். அப்போது பேசிய உதயநிதி,"ஒருவர் திருநங்கை அல்லது திருநம்பி என்று அறிந்து அதை வீட்டில் சொன்னதும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடுகிறார்கள். இப்படி பலர் ஆதரவற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆகவே 18 வயது நிரம்பிய திருநங்கையர் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க வழி செய்யவேண்டும்" என பேசியிருந்தார்.

Udhayanidhi stalin spoke about Transgenders in TN Assembly

கவுன்சிலிங்

திருநங்கைகளாக பள்ளிப் பருவத்தில் உணரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக கவுன்சிலிங் உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் "திருநங்கைகளாக உணரக்கூடியவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பள்ளியிலேயே கவுன்சிலிங் வழங்கப்படும்" என அறிவித்தார்.

Udhayanidhi stalin spoke about Transgenders in TN Assembly

திருநங்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். சட்டசபையில் திடீரென எழுந்து கேள்வியெழுப்பியது குறித்து பலரும் தற்போது வைரலாக பேசிக்கொண்டுள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

 

UDHAYANIDHISTALIN, ASSEMBLY, TRANSGENDERS, திருநங்கையர், சட்டசபை, உதயநிதிஸ்டாலின்

மற்ற செய்திகள்