'அவர் ஒரு பெண் என்றும் பாராமல்'... 'எவ்வளவு கொச்சையான வார்த்தைகள்'... 'உதயநிதி இப்படி பேசலாமா?'... சசிகலா தரப்பு அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சசிகலாவின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும், அவரது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெய்ஆனந்த் திவாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதயநிதி பேசிய பேச்சைத் திரும்பப் பெறவில்லை என்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளைக் கொண்டு உதயநிதி விமர்சித்தது கண்டனத்துக்குரியது எனவும் திவாகரன் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உதயநிதிக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் பெண்களைப் பெரிதும் மதிக்கின்ற தமிழ்ச் சமூகத்தில், இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்ணியத்திற்கும், திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சாட்சி என்றும் தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சசிகலாவை விமர்சனம் செய்தது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியது என பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பெண்களை அரசியலுக்கு வரவிடாமல், இம்மாதிரி விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்