"தமிழ்நாட்டோட பெருமை".. ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டிய உதயநிதி.. வைரலாகும் ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடர், இந்திய அணிக்கு சிறப்பான ஒன்றாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த இந்த தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி பட்டையைக் கிளப்பி இருந்தது.

"தமிழ்நாட்டோட பெருமை".. ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டிய உதயநிதி.. வைரலாகும் ட்வீட்!!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மீண்டும் மீண்டுமா?".. சிவனேன்னு இருந்த வாகனை ஜாலியா சீண்டிய வாசிம் ஜாஃபர்.. வைரல் ட்வீட்!!

மேலும் இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதே போல, ஆஸ்திரேலியா அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் சிறப்பாக பந்துவீசி பட்டையைக் கிளப்பி இருந்தனர். அந்த வகையில், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் அஸ்வின் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi stalin appreciate ravichandran ashwin for no 1 icc ranking

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் உலகில் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக வலம் வரும் அஷ்வின், தொடர்ந்து பல்வேறு சாதனைகளையும் படைத்து வரும் சூழலில், தற்போது தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஸ்வினை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

Udhayanidhi stalin appreciate ravichandran ashwin for no 1 icc ranking

Images are subject to © copyright to their respective owners.

அஸ்வின் புகைப்படத்தை பகிர்ந்த உதயநிதி, "தமிழ்நாட்டின் பெருமை. கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இதற்கு நீங்கள் தகுதியானவர். அதேபோல இந்திய கிரிக்கெட்டுக்கான உங்களது பங்களிப்பை இது உரக்கப் பேசுகிறது. உங்களது அபார கிரிக்கெட் கெரியரில் இதுபோல மென்மேலும் ஏராளமான சாதனைகள் வர உள்ளன" என குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.

Also Read | 4 வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த கோலி.. "அந்த மேட்ச் முன்னாடி அவருகிட்ட அஸ்வின் சொன்ன விஷயம்".. வைரல் பின்னணி!!

UDHAYANIDHI STALIN, RAVICHANDRAN ASHWIN

மற்ற செய்திகள்