"குழந்தைங்க பசியோட இருக்க கூடாது".. "தாயுள்ளத்தோட".. பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. உதயநிதி போட்ட ட்வீட்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் மதிய உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவுத் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
Also Read | கிரிக்கெட் அம்பையர் டூ குட்டிக் கடை முதலாளியாக மாறிய பிரபலம்.. திடீரென மாரடைப்பால் நேர்ந்த துயரம்!!
காலையில் எழுந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் அதிகம் பேர் சரியாக காலை உணவை சாப்பிடுவதில்லை என்ற தகவல், தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், சிலரின் குடும்ப சூழ்நிலையும் உணவருந்தாமல் பள்ளிக்கு வர சில குழந்தைகளை வழி வகுக்கிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அரசு பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கான காலை உணவுத் திட்டம், தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று, இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகள் என மொத்தம் 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் படித்து வரும் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு முதற்கட்டமாக இந்த காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன் மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி உண்ணவும் செய்தார். தமிழக அரசின் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், எம்எல்ஏ ஆன உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக சில கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உதயநிதியின் பதிவில், "பசி, கல்விக்கு என்றும் தடையாகக் கூடாது என்ற தாயுள்ளத்துடன், தமிழ்நாடு கல்வியில் மென்மேலும் சிறக்கும் வகையில், வரலாறு போற்றும் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்ட’த்தை மதுரையில் தொடங்கிவைத்து நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழிநடத்தும் முதல்வர் அவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான ட்வீட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பசி, கல்விக்கு என்றும் தடையாகக் கூடாது என்ற தாயுள்ளத்துடன், தமிழ்நாடு கல்வியில் மென்மேலும் சிறக்கும் வகையில், வரலாறு போற்றும் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்ட’த்தை மதுரையில் தொடங்கிவைத்து நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழிநடத்தும் முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றி. pic.twitter.com/5ruX3Bd33z
— Udhay (@Udhaystalin) September 15, 2022
Also Read | "ஒரு காலத்துல ஹாஸ்பிடலா இருந்த இடம்".. இப்போ உள்ள போய் பாத்தா.. அல்லு சில்லு சிதற வைக்கும் சம்பவம்!!
மற்ற செய்திகள்