‘மேடம் பைக்குல துப்பட்டா சிக்கியிருக்கு’.. தனியாக செல்லும் பெண்கள்தான் குறி.. போலீஸில் சிக்கிய இளைஞர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்து வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘மேடம் பைக்குல துப்பட்டா சிக்கியிருக்கு’.. தனியாக செல்லும் பெண்கள்தான் குறி.. போலீஸில் சிக்கிய இளைஞர்கள்..!

என்னது 72 வருசமா எங்கயுமே மாட்டலையா..! செம ‘ஷாக்’ கொடுத்த தாத்தா.. மிரண்டு போன போலீஸ்..!

தனியாக செல்லும் பெண்தான் குறி

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த உடையார்பாளையம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் சாலையில் உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக மருத்துவர், செவிலியர் என தனியாக செல்லும் பெண்களிடம் மர்ம நபர்கள் ரசாயன பொடி தூவி கொள்ளை அடித்து வந்துள்ளனர். அப்போது தனியாக செல்லும் பெண்களிடம், ‘உங்களது துப்பட்டா அல்லது சேலை வண்டியில் சிக்கியுள்ளது’ என கூறி நூதனமாக திருடி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

ரசாயன பொடி தூவி கொள்ளை

இதனிடையே நேற்று இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (50 வயது) என்ற பெண்,  இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார். சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள், பழனியம்மாளிடம் அவரது சேலை வண்டியில் மாட்டி உள்ளதாக கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் வண்டியை நிறுத்த முயன்றுள்ளார். உடனே அந்த இளைஞர்கள் ரசாயன பொடியை தூவி அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர்.

போலீசார் தீவிர சோதனை

இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் மற்றும் ஜெயங்கொண்டம் துணை காவல் துறை கண்காணிப்பாளர்‌ கலைகதிரவன் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

Two youth arrested by police for robbery from women in Ariyalur

சிக்கிய இளைஞர்கள்

இதனிடையே இரும்புலிக்குறிச்சி அருகே பல்சர் பைக்கில் சென்ற 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இவர்கள் தான் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 27), அதே ஊரைச் சேர்ந்த மற்றுமொருவரான ராஜேஷ் (வயது 24) என்பதும் தெரியவந்துள்ளது.

வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கடந்த ஒரு வாரமாக தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இவர்கள், சில மாதங்களுக்கு முன்பு பொன்பரப்பி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களில் பெண்களிடம் நகைகள் பறிக்கும் செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கொள்ளையடிக்கும் போது மாட்டிக்கொள்ளாமல் இருக்க பெண்களின் கண்களில் கான்பிளவர் மாவை தூவியதாக கூறியுள்ளனர்.

கொள்ளையடித்த நகைகள் பறிமுதல்

Two youth arrested by police for robbery from women in Ariyalur

கடன் தொல்லையால் வழிப்பறியில் ஈடுப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் நகை, 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  கான்பிளவர் மாவை தூவி தனியாக செல்லும் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘என் புருஷன் குடிச்சு இறந்துட்டாரு’.‌. எல்லாரையும் நம்ப வைத்த மனைவி.. காதலன் சிக்கியதும் க்ளைமாக்ஸில் பரபரப்பு ட்விஸ்ட்..!

TWO YOUTH ARRESTED BY POLICE, ROBBERY FROM WOMEN, ARIYALUR, ரசாயன பொடி தூவி

மற்ற செய்திகள்