தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் நிவாரணம்.. முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார்.
Also Read | GP Muthu: "நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க".. GP முத்துவின் பேச்சை கேட்டு கலகலத்துப்போன போட்டியாளர்கள்..!
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விசாரணையின் இறுதி அறிக்கை நேற்று சட்ட பேரவையில் தாக்கலானது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,"தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர், மாவட்ட கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மற்ற செய்திகள்