“வடகறியில் உப்பு அதிகமா இருக்கு”.. சமையல் மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்.. தலைமறைவான ஹோட்டல் மேனேஜர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வடகறிக்கு உப்பு அதிகமாக இருந்ததாக கூறி சமையல் மாஸ்டர் மீது ஹோட்டல் மேலாளர் கொதிக்கும் எண்ணெனை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. வெளியான பரபரப்பு தகவல்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 56). இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு நுழைவு வாயில் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் நேற்று காலை வழக்கம்போல வெள்ளையன் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஹோட்டல் மேலாளர் வடகறியை சாப்பிட்டு விட்டு உப்பு அதிகமாக உள்ளதாக வெள்ளையனிடம் கேட்டுள்ளார். அதற்கு வெள்ளையன், தான் இப்போதுதான் சுவைத்து பார்த்தாகவும், உப்பு சரியாகவே உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மேலாளர் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து சமையல் மாஸ்டர் வெள்ளையன் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் வலியால் கதறித்துடித்த வெள்ளையனுக்கு முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மீட்ட சக ஊழியர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், ஹோட்டல் மேலாளர் தன் மீது கொதிக்கும் எண்ணெனையை ஊற்றியதாக சமையல் மாஸ்டர் வெள்ளையன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஹோட்டல் மேலாளரை தேடி வருகின்றனர். வடகறியில் உப்பு அதிகமாக இருந்ததாக கூறி சமையல் மாஸ்டர் மீது மேலாளர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்