“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” சூறாவளி காற்றடித்து நடுக்கடலில் மூழ்கிய படகு.. தூத்துக்குடியில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | சாப்பாட்டு பந்தி Open பண்ணதும் உறவினர்கள் செய்த காரியம்.. கல்யாண வீட்ல நடந்த ருசிகரம்.. வைரலாகும் வீடியோ..!
தூத்துக்குடியை சேர்ந்த ரஹீம் என்பவர் தனக்கு சொந்தமான நாட்டுப் படகு ஒன்றில் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார். அவருடன் சேர்த்து 15 மீனவர்கள் அந்த படகில் சென்றுள்ளனர். திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியது. கடலில் அவ்வப்போது இதுபோல் பலத்த காற்று வீசுவது வழக்கம் என்பதால், மீனவர்கள் மீன் பிடிப்பதில் மும்முரம் காட்டியுள்ளனர். ஆனால் வீசிய சூறைக்காற்றால் அவர்கள் சென்ற படகில் ஓட்டை விழுந்துள்ளது. அதனால் கடல் நீர் படகுக்குள் புகுந்து மூழ்க தொடங்கியுள்ளது.
அதனால் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்துள்ளனர். ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் மீனவர்கள், தங்களை காப்பாற்றுமாறு குரல் கொடுத்துக்கொண்டே நீச்சல் அடித்தனர்.
அப்போது தூரத்தில் இருந்து மீன்பிடிக்க வந்த சக மீனவர்கள் சிலர், இவர்கள் கடலில் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே தாங்கள் வந்த படகுடன் அங்கு சென்று அவர்களை பத்திரமாக காப்பாற்றினர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்