"கால் வைக்குற இடம் எல்லாம் கண்ணி வெடி.. வேற யாராவது இருந்தா..".. Live-ல் மனமுடைந்து பேசிய TTF வாசன்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பைக் ஓட்டி நீண்ட தூரங்கள் பயணம் செய்து அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் யூடியூபர் TTF வாசன்.
இளைஞர் மத்தியில் மிகுந்த பிரபலமாக இருக்கும் TTF வாசனை சுற்றி ஏராளமான பரபரப்பு சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி தான் வருகிறது.
சமீபத்தில் TTF வாசன் கடலூர் வந்திருந்த போது அவரது ரசிகர்கள் கூடியிருந்த விஷயம் பெரிய அளவில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை உண்டு பண்ணி இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசாரும் அங்கே வந்திருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் காரில் பயணம் மேற்கொண்டிருந்த TTF வாசன், பைக்கில் சென்றால் தானே பிரச்சனை வரும். இப்போது காரில் போகிறேன் என கூறியிருந்தார். அப்படி இருக்கையில் அந்த காருக்கும் சிக்கல் ஒன்று முளைத்திருந்து. அதாவது சென்னையில் வாசன் பயணம் செய்த காரில் பதிவு எண் இல்லாமல் இருந்தது போக்குவரத்து விதிமுறையை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அந்த கார் அவரது நண்பருடையது என்பதும் சில தினங்களுக்கு முன்பு வாங்கிய கார் என்பதால் நம்பர் போர்டு இல்லாமல் ஓடியதும் தெரிய வந்தது.
அப்படி ஒரு சூழலில் தொடர்ந்து தன்னை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து தற்போது பேசிய TTF வாசன், "பிரச்சனை வராதுன்னு நினைச்சா இப்படி ஒரு பிரச்சனை வந்துருச்சு. உண்மையா சொல்றேன் கார்ல நம்பர் போர்டு இருந்திருந்தா கூட வேற ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி இருக்கும். இது உண்மையான வார்த்தை. இது யார்னாலுமே ஏத்துக்க முடியாது, ஆனால் இதுதான் Bitter Truth. அது என்னோட கார் இல்ல. அது பிரவீன் அண்ணா கார். ஸ்டேஷன் போய் அபராதம் எல்லாம் கட்டிட்டு ராத்திரி எடுத்துட்டு வந்தோம்.
பிரவீன் அண்ணா ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு, எனக்கு மனசு ரொம்ப ஒடஞ்சிடுச்சு. அடுத்த வாட்டி நான் போகும்போது வேற ஏதாவது வண்டி தேர்வு பண்ணி போகணும். அப்ப என்ன பிரச்சனை வருதுன்னு பார்க்க எனக்கு வர வர ஆர்வம் ஆயிடுச்சுங்க. இப்படி போனா இப்படி லாக் பண்றாங்க, சரி இப்படி போய் பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு அப்பயும் ஒரு பக்கம் லாக் பண்றாங்க. கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணி வெடியா இருக்கு. சிரிச்சுகிட்டே சொல்றேன் நிறைய பேர் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்து இருக்கேன், அதனால மன வலிமை ரொம்ப ஜாஸ்தி. எவ்ளோ பிரச்சனை கொடுத்தாலும் நாங்க தாங்கிக்கிறோம். ஆனா இது வேற யாருக்காவது கொடுத்து இருந்தாங்கன்னா அவங்க தற்கொலை அளவுக்கு கூட போயிருப்பாங்க. எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு" என TTF வாசன் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, சென்னை போலீஸை பாராட்டி பேசிய TTF வாசன், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் நபர்களை அனைத்து இடங்களிலும் சரியாக போலீசார் கண்காணித்து வருவதாகவும், அதை அப்படியே தொடர்ந்தால் பலரும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை நிறுத்துவார்கள் என்றும் கூறி பாராட்டி உள்ளார்.
மற்ற செய்திகள்