'கோவை பி.எஸ்.ஜியில் என்ஜினியரிங் படிப்பு'... 'இந்திய அமெரிக்கருக்கு 'டிரம்ப்' கொடுத்த சர்ப்ரைஸ்' ... அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபுவை முக்கிய பதவியில் நியமித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டின் உள்ள தேசிய அறிவியல் வாரியம் என்பது மிகவும் முக்கியமான ஆய்வுகளில் ஈடுபடும் நிறுவனம் ஆகும். அதில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அமெரிக்க அதிபரின் நேரடி மேற்பார்வையில் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் அந்த வாரியத்தின் உறுப்பினராக இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இவர் 6 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.
கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், கடந்த 1988ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை தொழில்நுட்பம் (தொழிற்சாலை உலோக பிரிவியல், வெல்டிங்) பிரிவிலும் படித்து பட்டம் பெற்றவர் சுதர்சனம் பாபு. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டமும் பெற்றுள்ளார். இதற்கிடையே சுதர்சன் தயாரிப்பு மற்றும் உலோக பிரிவியலில் 21 வருட அனுபவம் கொண்டவராகவும் உள்ளார்.
இதனிடையே சுதர்சனம் பாபு, அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினரான 3வது இந்திய அமெரிக்கராவார். அவருக்கு முன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய இருவரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.