‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால் ‘பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம் (41). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக் (41) கல்லூரி காலத்தில் இருந்து நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதில் தினேஷ் கடந்த 2005ம் ஆண்டு பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் ஃபாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது அஸ்லாம் என பெயர் வைத்துள்ளார்.
இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது அஸ்லாம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் முகமது அஸ்லாமின் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பரான ஃபாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்து தனக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்ட பர்வீன் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. உடனே மதபோதகர் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எரமிடமும் கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் இருவரும் ஃபாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூறியுள்ளனர்.
மேலும் தனிமையில் இருந்தபோது பர்வீனை மதபோதகர் ஃபாரூக் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை காட்டி பர்வீனிடம் 25 பவுன் தங்க நகைகளை ஃபாரூக் பறித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி மதபோதகர் ஃபாரூக்கை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஃபாரூக் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமது அஸ்லாமின் மூத்த மகளிடம் மதபோதகர் ஃபாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் ஃபாரூக், பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது அஸ்லாமின் சகோதரி எரம், மற்றும் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்