'பெத்த புள்ளையே நான் சாகணும்னு விரும்புறான்...' 'ரூம்ல அடைச்சு வச்சு கரன்ட் ஷாக் வேற...' 'எல்லாம் அதுக்காக தான்...' - கண்ணீர் விட்டு அழும் தாய்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில், பெற்ற மகனே சொத்துக்காக தன் தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்ததாக அளித்த புகார் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'பெத்த புள்ளையே நான் சாகணும்னு விரும்புறான்...' 'ரூம்ல அடைச்சு வச்சு கரன்ட் ஷாக் வேற...' 'எல்லாம் அதுக்காக தான்...' - கண்ணீர் விட்டு அழும் தாய்...!

லட்சுமி அம்மாள் என்னும் மூதாட்டி திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி கிராமத்தில் வெங்கடாசலபுரம் பகுதியில் வசித்து வருகிறார். லட்சுமி அம்மாளின் கணவர் கோபால் நடத்திவந்த ஹாலோ பிளாக் செய்யும் சிறு தொழிலை அவர் இறந்த பின் அவர்களின் அந்தத் தொழிலை அவரது மகன் ஜோதிமணியும் தாய் லட்சுமியும் நடத்திவந்துள்ளனர்.

இந்நிலையில் லட்சுமி அவர்களின் மகன் ஜோதிமணி,  சில நாட்களுக்கு முன்பு அவரை வீட்டை விட்டு துரத்தியதாகவும், மேலும், தன்னுடைய சொத்துகளை அபகரித்ததாகவும் கூறி லட்சுமி, தனது மகன் ஜோதிமணிமீது காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்

ஆனால் காவல்துறையின் தரப்பிலிருந்து நடவடிக்கைள் ஏதும் எடுக்காததால், மூதாட்டி லட்சுமி அவர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

தன் கணவரின் தொழிலால் உண்டாக்கிய சொத்துக்களை மகன் மட்டும் அனுபவித்து தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், மேலும் சொத்துக்காக தனக்கு கரண்ட் ஷாக் கொடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும், தன்னை துன்புறுத்தியதற்காக மகன் ஜோதிமணிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். தன் மகளுக்கு சொத்து சேரக்கூடாது என தன் மகனும், தன் மருமகளும் சதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்ற மகனே சொத்துக்காக தாயை கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்