‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 8 மாத கர்ப்பிணி செவிலியர் 250 கிமீ பயணம் செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (25). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். வினோதினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு அவரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுத்துள்ளது. இதற்கான ஆணை வினோதினிக்கு அனுப்பட்டுள்ளது.

வேலை ராமநாதபுரத்தில் ஆனால் வினோதினி திருச்சியில் இருந்துள்ளார். ஊரடங்கு உள்ள நேரத்தில் 8 மாத கர்ப்பிணி எப்படி அவ்வளவு தூரம் பயணம் செய்வது என உறவினர்கள் திகைத்துள்ளனர். இந்த தகவல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு சென்றுள்ளது. உடனே அவர் எடுத்த நடவடிக்கையில், மாவட்ட ஆட்சியர் மூலம் வினோதினிக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காரில் சுமார் 250 கிலோமீட்டர் பயணம் செய்து வினோதினி பணியில் சேர்ந்துள்ளார். கர்ப்பமாக உள்ள நேரத்தில் மருத்துவ சேவையாற்ற சென்ற செவிலியரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

CORONA, CORONAVIRUS, TRICHY, PREGNANT, NURSE, COVID19, LOCKDOWN