'உங்க மகள் தற்கொலை செஞ்சுகிட்டா!.'.. 'நிச்சயமான பெண்ணை அழைத்துச் சென்ற போலீஸ்'.. நாகையில் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் கூடுதல் சிறப்புப் போலீஸார் பிரிவில் பணிபுரிபவர் ராஜ்குமார். இவருக்கும் நாகப்பட்டிணத்தில் உள்ள மயிலாடுதுறை அருகே உள்ள பரசலூரைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பொறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிபவர் சித்ரா.
சித்ராவுக்கும் ராஜ்குமாருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், சித்ராவை ஒருநாள் ராஜ்குமார் திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி இவ்வாறு அழைத்துச் செல்லும் ராஜ்குமார், இம்முறை சித்ராவை அழைத்துக்கொண்டு சென்று, மீண்டும் திரும்பி வரும்போது சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, சித்ராவின் இல்லத்துக்கு வந்து கூறியுள்ளார்.
இதைக் கேட்ட சித்ராவின் பெற்றோர் மனமுடைந்து அழுததோடு, புகாரும் அளித்துள்ளனர். மேலும் மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் சித்ரா இறந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, அவரது பிரேதத்தை உடற்கூறாய்வுக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர். சித்ராவின் மரணம் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.