'டிஸ்கவரி சேனல்' பாத்து practice... 'பாகிஸ்தான்'ல மெசேஞ்சர் வழியா தொடர்பு... பகீர் கிளப்பிய 'பெரம்பலூர்' இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்தவர் கவிக்குமார். எம்.எஸ்.சி பட்டதாரியான இவர், அப்பகுதியில் ப்ரவுசிங் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.

'டிஸ்கவரி சேனல்' பாத்து practice... 'பாகிஸ்தான்'ல மெசேஞ்சர் வழியா தொடர்பு... பகீர் கிளப்பிய 'பெரம்பலூர்' இளைஞர்!

இந்நிலையில், அந்த இளைஞர் நெடுங்கூர், காப்புக்காடு பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இதுகுறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் உடனடியாக கவிக்குமாரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவரிடம் வன விலங்குகள் வேட்டையாடுவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக, பாகிஸ்தானிலுள்ள 'ஹன்டிங் கிளப்' ஒன்றுடன் மெசேஞ்சர் வாயிலாக தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். கவிக்குமாருக்கு வேட்டையாட துணையாக இருந்த அவரது தாயார் மற்றும் ஆசிரியர் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரவுசிங் சென்டர் நடத்தி வந்த கவிக்குமார், மாலை மற்றும் விடுமுறை நாட்களில் காட்டுப்பகுதிக்கு சென்று வன விலங்குகளை எப்படி வேட்டையாடுவது என்றும், அதனை எப்படி சமைப்பது என்பது குறித்தும் யூ  டியூபில்  வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். டிஸ்கவரி சேனல்களில் செய்வதை போன்றே அவரும் செய்து வந்துள்ளார். இத்தோடு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியும் வந்துள்ளார்.

கவிக்குமார் வேட்டையாட பயன்படுத்தும் பொருட்களை வனத்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்