இன்ஜினியரிங் படிச்சிட்டு.. சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்ற 22 வயது இளம் வேட்பாளர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இன்ஜினியரிங் படிச்சிட்டு.. சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்ற 22 வயது இளம் வேட்பாளர்

பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில், இன்று (பிப்-22) தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சென்னையை பொறுத்தவரை சுமார் 15 இடங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என்பதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள நிலவரத்தின் படி திமுக கூட்டணி கட்சிகள் அதிக இடத்தில் வெற்றி பெற்றும், முன்னணியில் உள்ளது. . இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சி வார்டின் முடிவு வெளிவந்துள்ளது.

அதில் வார்டு எண் 5ல், BE பட்டதாரியும், 22 வயது இளம் வேட்பாளருமான சினேகா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: முதல் வெற்றியை பதிவு செய்தது மக்கள் நீதி மய்யம்..!

TRICHY, 22-YEAR-OLD CANDIDATE SNEHA WON THE ELECTION, TAMILNADU LOCALBODY ELECTION2022

மற்ற செய்திகள்