'கொரோனா பயத்தால'... 'ஹாஸ்பிடல் பக்கமே போகாம இருக்கீங்களா?'... 'மருத்துவர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மற்ற நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளதே கொரோனா உயிரிழப்பு உயர காரணமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக இதயவியல், நரம்பியல், மகப்பேறு, சிறுநீரகவியல் என பல உடல் உபாதைகளுக்காகவும் சிகிச்சை பெற்று மருந்துகளை எடுத்து வந்தவர்கள் பலரும் தற்போது கொரோனா பாதிப்பால் மருத்துவமனைக்கு வர அச்சப்பட்டுக்கொண்டு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் உள்ளதால், அது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே ரத்த கொதிப்பு, இதயம், சிறுநீரகம் தொடர்பாக மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி உடல்நிலையை கண்காணித்து பாதிப்புகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அப்படி செய்து மற்ற உடல் உபாதைகளை கட்டுக்குள் வைத்துள்ளபோது தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அது மோசமான விளைவை ஏற்படுத்தாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் தேவையில்லாமல் அச்சம் கொண்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், அதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரத்துறையின் 104 என்ற இலவச அழைப்பேசிக்கு அழைத்து ஆலோசனை பெறலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்