'செல்ஃபோனால் சிதறிய கவனம்'... 'ஐடி இளம் பெண் ஊழியருக்கு'... 'சென்னையில் நடந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஐடி இளம் பெண் ஊழியர் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'செல்ஃபோனால் சிதறிய கவனம்'... 'ஐடி இளம் பெண் ஊழியருக்கு'... 'சென்னையில் நடந்த சோகம்'!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர் 25 வயதான மித்ரா (25). இவர் சென்னை பெருங்களத்துாரில் தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அண்மையில்தான் தனது நிறுவனத்தின் வேலை தொடர்பாக வெளிநாடு சென்றுவிட்டு, கடந்த திங்கள்கிழமையன்று சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக, பெருங்களத்தூரில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கிளம்பி, செவ்வாய்கிழமையன்று ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது செல்ஃபோன் பேசியபடியே, தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, விரைவு ரயில் வந்ததை மித்ரா கவனியாமல் சென்றுள்ளதாகத் தெரிகிறது. வேகமாக வந்த விரைவு ரயில், மித்ரா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து, தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், மித்ரா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடக்கும்போது கவனம் சிதறும் செயல்களை செய்யாமல், கவனமாக கடக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ACCIDENT, CHENNAI, ITEMPLOYEE