மகன் மப்புல இருக்குறப்போ.. அப்பா கொடுத்த அட்வைஸ்.. வெறியான மகன் செய்த கொடூரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர்: குடிப்போதையில் பெற்ற தந்தையையே தீர்த்துக் கட்டிய சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுக்கு கொடுத்த தங்க நாணயம்.. அடகுக் கடையில் தெரிய வந்த உண்மை.. வேட்பாளரின் கணவர் கூறிய தகவல்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இருக்கும் ஆரணி தமிழ் காலனியில் வசித்து வருபவர் 52வயதான வேணு. சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மகன் மணிகண்டன் (21) மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஒரே வீட்டில் வாழ்ந்த தந்தை மகன்:
வேணுவின் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையிலும், தனது இரண்டு மகள்களையும் திருமணம் செய்துகொடுத்துள்ளார். அதன் பின் வேணுவும் மணிகண்டனும் மட்டுமே ஒரே வீட்டில் வசித்துவந்தனர். தினமும் வேணுவின் ஒரு மகள் இரண்டுபேருக்கும் சாப்பாடு எடுத்துவந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
போதைப்பழக்கத்திற்கு அடிமை:
வேணுவின் மகன் மணிகண்டனுக்கு மது, கஞ்சா போதை பழக்கத்துக்கு அடிமையானவர் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முழுவதும் மணிகண்டன் குடிபோதையில் இருந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றி சண்டை:
மணியின் இந்த நிலை குறித்து தந்தை வேணு அவரை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு தகராரில் முடிந்துள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தந்தையின் தலையை பிடித்து சுவற்றில் அடித்துள்ளார்.
தூக்கம்:
இதில், சுவற்றில் உள்ள கல் குத்தி ரத்தவெள்ளத்தில் வேணு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதிக போதையில் இருந்ததால் மணிகண்டன், தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே தூங்கிவிட்டார்.
அதிர்ச்சி:
பலமணி நேரம் கழித்து போதை தெளிந்து மணிகண்டன் விழித்த போது தன் தந்தை பக்கத்தில் ரத்தவெள்ளத்தில் தந்தை இறந்துகிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தெளிந்த பிறகு கதறிய மணிகண்டன், வீட்டுக்கு வெளியே உள்ள மின்சார கம்பம் மீது தனது தலையை மோதி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் மணிகண்டனை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் தந்தை வேணுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவரின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அளித்த கொடுக்கப்பட்ட புகாரின்படி, ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்