“கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை, பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!

இந்நிலையில் சென்னையில் டிராஃபிக் காவலர் ஒருவர் இந்த ஊரடங்கு சூழலிலும் வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றித் திரியும் வாகன ஓட்டிகளிடம் கெஞ்சி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வாகன ஓட்டிகளிடம் பேசும் அந்த டிராஃபிக் காவலர் கையெடுத்துக் கும்பிட்டபடி,  “தயவு செய்து வீட்ல இருங்க. வெளிய வராதீங்க. உங்க பாதத்த தொட்டு, கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன். ப்ளீஸ்... தற்செயலா வந்துட்டீங்க. சீரியஸ்சஸ புரிஞ்சுக்கங்க. கால தொட்டு கும்பிட்டு கேட்டுக்குறேன். இவ்வளவு பேர் வந்தா எப்படிங்க நோயை கட்டுப்படுத்த முடியும்” என்று பேசுகிறார். 

மேலும் சில வாகன ஓட்டிகளிடம் பேசிய இந்த டிராஃபிக் காவலர், “தயவு செய்து வெளிய வராதீங்க. உங்க காலத் தொட்டு கெஞ்சு கதறி கேக்குறேன். வராதீங்க. ஒவ்வொரு தனி மனிதனும் விழிப்போட இருந்தாதான் நோயை குறைக்க முடியும். நம்ம நாட்டுக்காக, நமக்காக, நமக்காக வீட்டுக்கா சொல்றேன். இத விட சொல்றதுக்கு எனக்கு வார்த்தையே இல்ல. வீட்லயே இருங்க” என்று  கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசியுள்ளார்.

TRAFFICCOP, CORONAVIRUSLOCKDOWN, 21DAYSLOCKDOWN, CORONAVIRUSININDIA, STAYHOMEINDIA