TNPSC: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு.. மொத்த பணியிடங்கள் விவரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: குரூப் 2 மற்றும்  குரூப் 2ஏ தொடர்பான அறிவிப்பாணை வருகிற பிப். 23 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TNPSC: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு.. மொத்த பணியிடங்கள் விவரம்!

தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையம், (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 (Group 2), குரூப்-2ஏ (Group 2A) தேர்வுக்கான தேதிகள் மற்றும் 6 ஆயிரம் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி, குரூப் 2 மற்றும்  குரூப் 2ஏ தேதி வரும் மே 21 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், மார்ச் 23-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் எழுத விரும்புவோர்களுக்கு பொதுத்தமிழ் கேள்விகள் - 100, பொது அறிவு - 75, ஆப்டியூட் - 25 என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம் வழியில் எழுத விரும்புவோர்களுக்கு பொது ஆங்கிலம் கேள்விகள் - 100,பொது அறிவு - 75, ஆப்டியூட் - 25 என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இந்த 200 கேள்விகளுக்கான மொத்த மதிப்பு 300. இந்த 300 மதிப்பெண்களில் 90 மதிப்பெண் கீழ் பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC:பணியாளர்கள் நியமனம்

பல்கலை கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, டிஎன்பிசியிடம் ஒப்படைக்க தமிழ்நாடு உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆவின், வீட்டுவசதிவாரியம், மின்வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பணி நியமனமும் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற கடிதம் வந்துள்ளது. தற்போது நியமிக்க உள்ள காலிபணியிடங்களில் 124 பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தரப்பட்டுள்ளது.

மே 21 குரூப் தேர்வு தேதி

  • மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
  • மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். 
  • முதன்மை தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை் 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும்
  • 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படும்.
  • மாலையில் நடைபெறும் தேர்வில் எவ்வித நேர மாற்றமும் இல்லை.
  • தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தலாம்
  • டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை, பிப்ரவரி 23 ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்

  • தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
  • துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3 ம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் .
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும்.
  • இன்டர்வியூ போஸ்ட் - 116 ஆகவும், நாஃன் இன்டர்வியூ போஸ்ட் - 5,413 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC, GROUP 2, GROUP 2A EXAM, BALACHANDRAN, EXAM DATE ANNOUNCRE, TAMILNADU

மற்ற செய்திகள்