TNPSC தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது... மறு தேர்வு குறித்த புதிய அறிவிப்பு வெளியீடு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த TNPSC தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
TNPSC சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகள் பல்வேறு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படுகின்றன. கொரோனா பாதிப்புகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு TNPSC தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து 2022-ம் ஆண்டு குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வருகிற 2022 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியில் தமிழர்களுக்கே அரசு வேலைகளில் இடம் கிடைக்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட முயற்சியில் தமிழ் மொழியில் புலமை இருந்தால் மட்டுமே இனி பணி கிடைக்கும். இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சூழலில் ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் பல்வேறு பணியிடங்களுக்கான TNPSC தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. நாளை ஜனவரி 8-ம் தேதி நடைபெற உள்ள கட்டடக்கலை மற்றும் திட்ட உதவிப் பணியாளர்களுக்கான TNPSC தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு தற்போது ஒத்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிறு ஜனவரி 9 அன்று நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 11-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் 9-ம் தேதிக்கான ஹால் டிக்கெட்டையே 11-ம் தேதி அன்று பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்