'யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில்... தமிழ்நாட்டின் வரவு செலவு கணக்கு'!.. நிதி அமைச்சர் பிடிஆர் மாஸ்டர் மூவ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் இதுவரை 472 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

'யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில்... தமிழ்நாட்டின் வரவு செலவு கணக்கு'!.. நிதி அமைச்சர் பிடிஆர் மாஸ்டர் மூவ்!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான இணையப் பக்கத்தை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மே மாதம் 7ம் தேதிக்கு பின் பெறப்பட்ட நிதிகளை கொரோனா நிதியாக அடையாளப்படுத்தி, நிதி கணக்கை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

ஜனநாயகத்தில் அரசின் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம் என தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து விவகாரங்களையும் (வரவு, செலவு கணக்கு) கணினிமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பி.எம். கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் கிடையாது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 மாதங்களில் சுமார் ரூ. 472 கோடி வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடிதான் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்