ஹெட்போன் மாட்டியபடி தண்டவாளத்தை கடந்த இளைஞர் ரயில் மோதி பலி.. தமிழகத்தை உலுக்கிய சோகம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அளவுக்கு அதிகமான சத்தத்தில் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது சுற்றி நடக்கும் எதுவுமே தெரியாது.
Also Read | காபி ஆர்டர் எடுக்கும் ட்விட்டர் சிஇஓ.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. பின்னணி என்ன??
எனினும் ஒரு ஆபத்தான நேரத்துக்கு நடுவே இதை செய்தால் என்ன விளைவு நேரிடும் என்பதற்கு உதாரணமாய் தற்போது ஒரு சோக சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் 21 வயது ஆன வெங்கடேஷ் என்பவர் மின்சார லைன் மாற்றி, மூன்று பேஸ் லைன் மின்சாரம் வந்த பிறகு, தம்முடைய பருத்தி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டில் இருந்து சென்று இருக்கிறார். அவருடைய வயலுக்கு செல்லும் வழி, ரயில்வே ட்ராக் இருக்கும் பகுதியை கடந்து செல்வதாக இருந்திருக்கிறது.
அந்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு இரவு நேரம் சென்ற வெங்கடேஷ், தன்னுடைய ஃபோனில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தனக்கு விருப்பமான பாடல்களை கேட்டுக் கொண்டே சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு மன்னையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மன்னை எக்ஸ்பிரஸ் மிகவும் விரைவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தம்முடைய காதுகளில் ஹெட்செட் அணிந்திருந்த வெங்கடேஷுக்கு ரயில் வரும் சத்தம் கேட்டிருக்க வாய்ப்பில்லாமல் இருந்ததாக தெரிகிறது.
ரயில் வரும் சத்தத்தை அறியாமலேயே ரயில்வே டிராக்கை கடக்க முயற்சித்திருக்கிறார் வெங்கடேஷ். ஆனால் அதற்குள் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் இளைஞர் வெங்கடேஷ் மீது மோதிவிட, பரிதாபமாக சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் உயிரிழந்திருக்கிறார். இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் வெங்கடேஷின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
வெங்கடேஷ் உடலானது மேற்படி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பருத்தி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற வெங்கடேஷ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததற்கு ஹெட்செட்டில் அதிக சத்தத்துடன் பாடல் வைத்து சென்றதும் ஒரு காரணமாக இருந்ததாக சொல்லப்படும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்