3 கல்யாணம்.. 30 சிம் கார்டு.. திருமணம் ஆன 20 நாளில் நகையுடன் மாயமான 28 வயது பெண்.. சிக்கியது எப்படி? பரபரப்பு சம்பவம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தாம்பரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் திருமணமாகி 20 நாளே ஆன நிலையில் புதுப்பெண் ஒருவர் தன் கணவரை ஏமாற்றிவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாகியுள்ளது.

3 கல்யாணம்.. 30 சிம் கார்டு.. திருமணம் ஆன 20 நாளில் நகையுடன் மாயமான 28 வயது பெண்.. சிக்கியது எப்படி? பரபரப்பு சம்பவம்..

Also Read | Elon Musk : "இது லிஸ்ட்லயே இல்லையே.." மூளைக்குள் சிப் சோதனை.. குரங்குகளிடம் ஓவர்.. அடுத்து மனிதர்களிடம்.. எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்.!

சென்னை: தாம்பரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். நகைக்கடையில் வேலை பார்த்து வந்த இவருக்கு பெண் ஒருவருடன் காதல் ஏற்பட கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் தீபாவளிக்காக எடுத்த புது புடவை, ஜாக்கெட்டை வாங்கி வரச் சொல்லி கணவரை அனுப்பி இருக்கிறார் அந்த புது பெண்.

28 வயதான அபிநயா என்கிற கயல்விழி என்று அழைக்கப்படும் இவர் கணவர் மீண்டும் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் தாம்பரம் போலீசாரிடத்தில் புகார் அளித்த போது தான் விஷயமே தெரியவந்தது. குறிப்பிட்ட இந்த பெண் இதுபோன்று பலரையும் திருமணம் செய்து நகை, பண மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் தாம்பரம் போலீசார் தனிப்படை அமைத்து ஈடுபட்டனர்.

அப்போதுதான் இந்த பெண் ஷேர் சாட்டை பயன்படுத்தி பலரை மோசடி செய்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட ஐபிக்களில் இருந்து இவரது ஷேர் சாட் கணக்கு இயங்கி வந்திருக்கிறது. நடராஜன் மட்டுமல்லாமல் பலரையும் இவர் திருமணம் செய்துள்ள விஷயமும் அம்பலத்துக்கு வந்தது. இதனை அடுத்து சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் இந்த வழக்கை விசாரித்த போலீசார் சோழிங்கநல்லூர் அருகே இருக்கும் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து தான் அபிநயா என்கிற கயல்விழி வந்து போனதை அறிந்து அங்கு சென்று பார்த்த போது அவர் மதுரைக்கு சென்று விட்டார் என்கிற தகவல் தெரியவந்தது.

பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் இரண்டு சகோதரர்கள் மற்றும் தந்தையுடன் ஒரே குடும்பமாக மதுரையில் இருந்திருக்கிறார். இவருடைய தந்தை பெட்ரோல் பங்கில் மாச சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு விஜய் என்பவரை அபிநயா திருமணம் செய்திருக்கிறார். அவரிடம் இருந்து மாயமான பிறகு இந்த பெண், 2013 ஆம் ஆண்டு சிவகங்கை பகுதியில் நகைக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து செந்தில்குமார் என்பவருடன் பேசி  பழகி திருமணம் செய்திருக்கிறார்.

அவருடன் இப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சொல்லப்படும் நிலையில் அங்கிருந்து மாயமான பிறகு பல்வேறு நகைக்கடை, ஜவுளிக்கடை, செல்போன் கடை உள்ளிட்ட பலவற்றிலும் வேலை செய்து பலரையும் ஏமாற்றி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. கடைசியாக கேளம்பாக்கத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவரை ஏமாற்றி அவரையும் திருமணம் செய்ததாக சொல்லப்படும் நிலையில் தாம்பரம் பேக்கரி அருகே நடராஜனை சந்தித்த அபிநயா, அவரிடம் காதலாக பழகி, தனக்கு குடும்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். எனவே இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வரவேற்பு கூட அப்பகுதியில் மிகவும் பிரமாண்டமாக நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நடராஜனை ஏமாற்றி விட்டு நகைகளை திருடி விட்டுச் சென்றிருக்கிறார் அபிநயா என்கிற கயல்விழி. அதன் பிறகு இந்த பெண்ணை தனிப்படை போலீசார் கண்காணித்து பிடித்து விட்டனர்.

30-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு தவறுகளை செய்து வந்த இந்த பெண், நடராஜனை திருமணம் செய்த இருபதே நாட்களில் நகைகளை திருடிச் சென்றுள்ளார். அத்துடன், தான் திருடிய நகைகளை தன்னுடைய இரண்டாவது கணவர் செந்தில்குமார் மூலமாக விற்றுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து செந்தில்குமார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | Elon Musk : அமெரிக்க பாடகர் கன்யே வெஸ்ட் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. எலான் மஸ்க் பரபரப்பு விளக்கம்.!!

CHENNAI, MARRIED WOMAN, JEWEL THEFT

மற்ற செய்திகள்