டிசம்பர் 2-ஆம் தேதிய என்னால 'மறக்கவே' முடியாது...! அன்னைக்கு 3000-க்கும் மேல 'மெசேஜ்' வந்துட்டு இருந்துச்சு...' - உணர்ச்சிவசப்பட்ட வெதர்மேன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

என்னுடைய வாழ்க்கையில் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் டிசம்பர் 2-ஆம் தேதியை மறக்கமாட்டேன் என தமிழ்நாடு வெதர்மேன் உணர்ச்சிவயப்பட்டு தன் சமூகவலைத்தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டிசம்பர் 2-ஆம் தேதிய என்னால 'மறக்கவே' முடியாது...! அன்னைக்கு 3000-க்கும் மேல 'மெசேஜ்' வந்துட்டு இருந்துச்சு...' - உணர்ச்சிவசப்பட்ட வெதர்மேன்...!

தமிழகத்தில் எப்போது மழை பெய்யும், எங்கே மழை வரும் என தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பது போக தற்போது மழை குறித்தும் உலக சுழலியல் குறித்தும் சமூகவலைத்தள பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் பல போஸ்ட்களை செய்து வருகிறார் பிரதீப் ஜான் என்பவர்.

இவர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியை சென்னை மக்களால் மட்டுமல்ல எனக்கும் ஜென்மத்துக்கும் மறக்க முடியாது என குறிப்பிடுள்ளார்.

அந்த பதிவில், '6 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதிகாலை 3 முதல் 4 மணிக்கு இடையே வெளியில் மழை வெளுத்துக் கொண்டிருந்தது. எனக்கு தெரிந்து அப்படியொரு பேய் மழையை நான் படித்தது இல்லை பார்த்ததும் இல்லை.

கிட்டத்தட்ட 20 மணி நேரமாக பெய்து மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 300 மில்லி மீட்டர் அளவைத் தாண்டி விட்டிருந்தது. என்னுடைய முகநூல் பக்கத்தில் உதவி கேட்டும், வெதர் அப்டேட் கேட்டும்,  படகு அனுப்புங்கள், உதவுங்கள், எங்களது பகுதியை வெள்ளம் சூழ்ந்து விட்டது என பல மெசேஜ்கள் குவிந்தன.

ஆனால் நானும் மழையின் பிடியில் சிக்கி கொண்டேன். எனது லேப்டாப்பில் சில நிமிடங்களுக்குத்தான் பேக்கப் இருந்தது, மின்சாரமும் இல்லை. லேப்டாப் ஆஃப் ஆவதற்குள் ஒரு கடைசி அப்டேட்டாக மழை நீடிக்காது என போட்டேன். அதைப் போட்டு விட்டு நான் தூங்கப் போனபோது அதிகாலை 4 மணியாகும். அந்த மழை நாளில் எனது வாழ்க்கையே மாறிப் போகும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அடுத்த நாள் பல இடங்களில் மின்சாரமும் இல்லாமல், டிவியும் இல்லாமல் எனது அப்டேட்டுகளை மட்டுமே மக்கள் நம்பினர். இது எனக்கு மிக பெரிய பொறுப்பாக மாறியது. என்னுடைய இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அவர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்ய சவாலுக்கு மத்தியிலும் நான் தொடர்ந்து அப்டேட்டுகளைக் கொடுத்தேன். அன்று என் அப்டேட்டுகளை மக்கள் நம்பினர். இனி என்னால் முடிந்த அளவு, எனது உடல் நிலை இடம் கொடுக்கும் வரை, எனது குடும்பத்தினர் அனுமதிக்கும் வரை தொடர்ந்து வானிலை குறித்த அப்டேட்டுகளை கொடுத்தபடியே இருப்பேன்.

மக்களுக்கு வானிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு விதைத்து விட்டோம் என நம்புகிறோம். இனி பல நிபுணர்கள் இந்தத் துறையில் இருப்பார்கள் என நினைக்கிறேன்' என பிரதீப் ஜான் குறிப்பிடுள்ளார்.

 

WEATHERMAN, DEC 2, 2015

மற்ற செய்திகள்