‘மீட்புப் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி’.. ‘குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனை’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வரிடம் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி.

‘மீட்புப் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி’.. ‘குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனை’..

மணப்பாறை அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் கடினமான பாறையை உடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் சுர்ஜித்தை மீட்கும்பணியை கைவிடமாட்டோம் என வருவாய் நிர்வாக ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்துள்ள பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “வீரமிக்க சிறுவன் சுர்ஜித் வில்சனுடன் எனது பிரார்த்தனைகள் இணைந்துள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

PMMODI, TRICHY, BOREWELL, SURJITH, SAVESURJITH, PRAYFORSURJITH, TN, CM