'கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரீங்களா'?... 'அப்போ கண்டிப்பா இத செய்யுங்கள்'... தமிழக அரசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கேரளா, மராட்டியத்திலிருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
- கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் சில நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும்
- சோதனையில் பாசிடிங் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேட் மையங்களில் தங்க வைக்கப்படுவர்
- சோதனையில் நெகடிங் வந்து அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவர்.
- வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும்முன் கொரோனா சோதனையை 3 நாட்களுக்குள் எடுத்திருக்க வேண்டும்
- சோதனை முடிவை www.newdelhiairport.in என்ற தளத்தில் அப்லோட் செய்திருக்க வேண்டும்.
மற்ற செய்திகள்