ஆஃபர் போடலாம், அதுக்காக இவ்ளோ ரேட் கம்மியாவா...! போறதுக்குள்ள காலி ஆயிடுமோ...? - அடிச்சு புடிச்சு மொபைல் கடைக்கு ஓடியவர்களுக்கு கிடைத்த ஷாக்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 6 ரூபாய்க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் என சலுகை அறிவித்து விற்ற கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவ தொடங்கியது முதல் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இன்னும் கொரோனா பரவல் முடிவடையாத நிலையில் மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சில தளர்வுகளோடு ஊரடங்கை பின்பற்றும் வருகிறது. மேலும் அந்தந்த மாவட்ட மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், இடைவெளி பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை ஊக்குவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கடைபிடிக்காத நபர்களுக்கு அபாரம் விதித்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடையில் விளம்பரத்திற்காக ரூ.6-க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் குறைந்த நாட்களுக்கு தான் இந்த விற்பனை இருக்கும் என எண்ணி, எந்த வித கொரோனா முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மொபைல் கடையில் குவிந்து, பொருட்களை வாங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சலுகை அறிவித்து மக்கள் கூட்டம் கூட காரணமாக இருந்த மொபைல் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு குவிந்து கிடந்த மக்கள் கூட்டத்தையும் கலைந்து போக சொல்லி கடையின் உரிமையாளரை கண்டித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பையும், கொரோனா நேரத்திலும் மக்கள் சலுகையை எதிர்பார்த்து கூட்டமாக குவிந்தது பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்