“பெத்தவங்கனு கூட பாக்காம இப்படி செஞ்சுட்டான்.. கொஞ்சம் என்னனு கேளுங்கய்யா!”.. போலீஸாரை வீட்டுக்கு அழைத்துவந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி மாவட்டம் கம்பத்தில் பெற்றோர் தாக்கியதால் பொறியியல் பட்டதாரி ஒருவர் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பெத்தவங்கனு கூட பாக்காம இப்படி செஞ்சுட்டான்.. கொஞ்சம் என்னனு கேளுங்கய்யா!”.. போலீஸாரை வீட்டுக்கு அழைத்துவந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவில், தனியார் பள்ளி எதிர்புறம் குடியிருக்கும் 60 வயதான ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் முருகேசன் என்பவருக்கும் அவரது மனைவி இந்திராணிக்கும் 25 வயதில் மனோஜ் என்கிற மகன் உள்ளார்.

பொறியியல் படிப்பு படித்துள்ள மனோஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்து, தான் வெளியில் சென்றுவருவதாகக் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர், “இந்நேரத்தில் எங்கு போகிறாய் என்றும் காலையில் போகலாம்” என்றும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் கொண்ட மனோஜ் தனது தந்தையை அருகில் இருந்த அரிவாளை எடுத்து தாக்கியுள்ளார். இதனைக் கண்ட மனோஜின் தாய் இந்திராணி அலறியதும் மனோஜ் அவரையும் தாக்கினார்.  இதனை அடுத்து மனோஜ் தனது அறையில் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டார்.

இதனிடையே முருகேசனோ, அடிபட்டதால், தனது மனைவியை அழைத்துக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு போனதுடன்,  காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில் போலீஸார் சென்று பார்த்தபோது, மனோஜ் தன் கழுத்தை பெல்டால் இறுக்கி படுக்கையிலேயே இறந்து கிடந்திருந்துள்ளார். அவரது பிரேதத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்