"காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்!".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்!.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ஈக்காட்டுதாங்கலில் ஐடி வேலை பார்த்துவரும் கிரிதரன் (28) தனது அறையில் ஒருநாள் இரவு தூங்கி எழுந்து  மறுநாள் காலை விழித்து பார்த்தபோது அங்கிருந்த 2 லேப்டாப்கள், 3,700 ரூபாய் பணம் ஆகியவை திருடு போயிருந்தன.

"காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்!".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்!.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி!

ALSO READ: “உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால்... இதை செய்யுங்கள்...!” - ரஜினியிடம் உருக்கமான கோரிக்கை வைத்த பிரபல திரைப்பட இயக்குனர்!

அதிர்ந்து போன அவர், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க,  இளைஞர் ஒருவர் அவரது அறைக்குள் நுழைந்து லேப்டாப்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரியவந்தது. எனினும் அந்த ராஜதுரை எனும் 22 வயதான அந்த நபர் பற்றி எந்த க்ளூவும் கிடைக்காமல் திணறிய காவல்துறை, பின்னர் உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் கர்ணன், எஸ்.ஐ- ஸ்ரீதர், தலைமை காவலர்கள் தாமோதரன், அச்சுதராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

பின்னர் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பெயின்டர் ஒருவர் தான் ராஜதுரையின் நண்பர் என்றும், அவருடன் அடிக்கடி செல்போனில் ராஜதுரை பேசிவந்ததையும் கண்டுபிடித்த போலீஸார், அந்த பெயின்டரின் செல்போன் சிக்னலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். ஒருநாள், அந்த பெயின்டருடன் பேசியவரின் செல்போன் சிக்னல் திருச்சியைக் காட்ட, அப்போது பெயின்டரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ராஜதுரை திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் பணம் எடுத்தது தெரியவந்தது. ஆனால் திருச்சியில் ராஜதுரை பதுங்கியிருந்த தெரியாமல் இருந்து வந்த நிலையில், பெயிண்டரும் ராஜதுரையும் திருச்சில் சங்கமிக்கலாம் என திட்டம் தீட்ட, அந்த திட்டத்தின் படி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்று காத்திருந்த போலீஸார், அங்கு வந்த ராஜதுரையை கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர் இந்த அந்த ராஜதுரைக்குமான ஒரு செண்டிமெண்ட்டான பிளாஷ்பேக் வெளியே வந்தது.

ஆம் 5-ம் வகுப்பு வரை படித்த ராஜதுரையும் பெருங்குடியைச் சேர்ந்த இந்த பெயின்டரும் கட்டட வேலை செய்யும்போது ‘திக் பிரண்ட்ஸ்களாக’ மாறியுள்ளனர்.  அப்போது அங்கு வேலைக்கு வருபவர்கள் இரவில் தூங்கும்போது, அவர்களின் செல்போன்களை லாவகமாக திருடிக் கொண்டு எஸ்கேப் ஆவதில் இளங்கலையில் தொடங்கி பி.எச்.டி வரை படித்து தேர்ந்துவிட்டார் திருடர் குலத் திலகரான ராஜதுரை. அப்படி இருக்கும்போதுதான், இரவு பகல் என விதவிதமான நேரங்களில் சென்னையில் அறை எடுத்து தங்கி பணிபுரிந்துகொண்டிருந்த ஐடி நிறுவன ஊழியர்கள், பகலில் காற்று வரவேண்டும் என கதவை திறந்து வைத்துவிட்டு அறைக்குள் தூங்கும் கலாச்சாரத்தை ராஜதுரை நோட்டமிட்டார். அவ்வாறு அவர்கள் காற்று வர வேண்டும் என தூங்கும்போது, காற்றோடு காற்றாக ராஜதுரையும் அரவம் தெரியாமல் உள்ளே நுழைந்து, அறையில் இருந்த லேப்டாப், செல்போன் என கிடைக்கும் ஐட்டங்களை லாவிவிட்டு பின்னர் அவற்றை திருச்சியில் இருக்கும் இன்னொரு பார்ட்னரின் உதவியுடன் விற்றுக் காசாக்கிவிடுவார்.

இப்படி இருந்த ராஜதுரை, திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய பின்னர் திருந்திவாழ வேண்டும், உழைத்து வாழ வேண்டும் என முடிவு செய்து காய்கறி வியாபாரத்தில் ஈடுபட, ஆனால் யாரையுமே நிம்மதியாய் வாழ விடாத இந்த கொரோனா ஊருக்குள் வந்து பலரின் வாழ்க்கையை முடக்க, ராஜதுரையின் காய்கறி வியாபாரத்தில் பெரிய கல்லே விழுந்தது. இதனால் வருமானம் இன்றி சிரமப்பட்ட ராஜதுரையின் பாட்டியும் அதே சமயம் இறந்துவிட, கையில் பணமில்லாமல் சிரமப்பட்ட ராஜதுரை, தனது குடும்பத்தில் சொத்துப் பிரச்னையையும் சந்தித்திருக்கிறார்.

அப்போது தான், வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கியம் என்கிற முடிவு எடுத்த ராஜதுரை மீண்டும், தான் கைவிட்ட தனது ஆஸ்தான தொழிலான திருட்டை மீண்டும் செய்ய ஆரம்பித்த்தார்.

ALSO READ: ‘நிழலுலக தாதாக்களின்’ உருவம் பொறித்த ‘தபால் தலைகள்’!.. ‘பாசக்கார உறவினர் செய்துவிட்டு போன சம்பவம்!’.. கொந்தளிப்பில் அதிகாரிகள்!

இந்நிலையில்தான் தீவிர விசாரணைக்கு பின்னர் லேப்டாப்களைத் திருடிய வழக்கில் போலீஸார் இவரை கைது செய்தனர். கள்ளகுறிச்சி, ஜவுளிபாளையத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் மீது ஏற்கெனவே லேப்டாப் திருடிய வழக்குகள் உள்ள நிலையில், இவரை விசாரித்த போலீஸார், இவரிடம் இருந்து 11 லேப்டாப்கள், 9 செல்போன்கள் முதலானவற்றை பறிமுதல் செய்து உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்