ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த மனைவி.! கண்டித்தும் கேட்காததால் கணவர் செய்த பகீர் காரியம்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் சமூக வலை தளங்களில் வீடியோ பதிவிட்டு வந்ததாக சொல்லப்படும் பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். 38 வயதான இவர் தனது மனைவி சித்ரா மற்றும் இரு மகள்களுடன் திருப்பூரில் உள்ள செல்லம் நகரில் வசித்து வந்தார். அமிர்தலிங்கம் திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றிவந்திருக்கிறார். இவரது மனைவி அருகில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்திருக்கிறார். இதனிடையே சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிடுவதை அவர் வாடிக்கையாக செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனை கணவர் அமிர்தலிங்கம் கண்டித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே, சோசியல் மீடியாவில் சிலருடைய அறிமுகம் அந்த பெண்மணிக்கு கிடைத்ததாகவும் இதனையடுத்து, சினிமாவில் நடிக்கும் நோக்கில் அவர் சென்னையில் குடியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தனது மூத்த மகள் திருமணத்திற்காக கடந்த வாரம் திருப்பூர் சென்றிருக்கிறார் அமிர்தலிங்கத்தின் மனைவி. திருமணம் முடிந்த பிறகு, மீண்டும் சென்னை செல்ல இருப்பதாக அவர் சொல்லியதாக தெரிகிறது. இதனை கடுமையாக எதிர்த்திருக்கிறார் அமிர்தலிங்கம். இதனால் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மூத்த மகளின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் சித்ரா. அங்கே இருந்தவர்கள் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தாக தெரிகிறது.
இதனையடுத்து, அடுத்தநாள் காலை தந்தை வீட்டுக்கு சென்றிருக்கிறார் அமிர்தலிங்கத்தின் மூத்த மகள். அப்போது வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சித்ரா சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுகுறித்து மத்திய காவல் நிலையத்துக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, அங்கிருந்து தலைமறைவான அமிர்தலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மரணமடைந்த சித்ராவின் கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் இதுகுறித்து அமிர்தலிங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "அது ரிஸ்க்கான விஷயம்".. மஸ்க்கையே அதிர வச்ச மாணவர்.. வெயிட் பண்ணி மஸ்க் எடுத்த முடிவு.. வைரல் ட்வீட்.!
மற்ற செய்திகள்