'ரூ.500 கோடி அபேஸ்... தமிழகத்தையே மிரட்டிய சதுரங்க வேட்டை தம்பதியை நியாபகம் இருக்கா?'.. ரிலீஸ் ஆனதும் மனைவி போட்ட ஸ்கெட்ச்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலமாக 500 கோடி ரூபாய் மோசடி செய்தவர் ஜான் பிரபாகரன்.

சென்னையச் சேர்ந்த இவர், ஜான் பிரபாகரன், சுகன்யா தம்பதியர், கடந்த 2012-ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலமாக 500 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக கைதாகினர்.
முன்னதாக ஜாமினில் விடுதலையான ஜான் பிரபாகரன் ஹைதரபாத் தப்பியோடி, அங்கு ஒரு வீட்டில் தங்கிருந்தவர், கடந்த 23-ஆம் தேதி ஒரு வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், கடந்த 2018-ஆம் ஆண்டு விடுதலையான சுகன்யா (ஜான் பிரபாகரனின் மனைவி), ஜான் பிரபாகரனை கொன்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜான் பிரபாகரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், ஆத்திரம் அடைந்த சுகன்யா, தான் ஏமாற்றப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல், தனது கணவர் ஜான் பிரபாகரனின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS