'IP Address மூலம் அடுத்த லிஸ்ட்'.. ‘திருச்சியை அடுத்து 3 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டியல்’.. விசாரணை தீவிரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறார் ஆபாச பட விவகாரத்தில் திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீடியோக்களை பகிர்ந்த 60 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'IP Address மூலம் அடுத்த லிஸ்ட்'.. ‘திருச்சியை அடுத்து 3 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டியல்’.. விசாரணை தீவிரம்..!

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம், பதிவிறக்கம் மற்றும் பகிர்பவர்கள் மீது போக்சோ மற்றும் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதனை அடுத்து குழந்தைகள் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியதாக திருச்சியை சேர்ந்த கிரிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பகிர்ந்தவர்களின் IP முகவரிகளை கண்டுபிடித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த மற்றும் பதிவேற்றம் செய்தவர்களின் பட்டியல் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் திருச்சியில் கைது செய்யப்பட்ட கிரிஸ்டோபர் அல்போன்ஸின் செல்போன் எண்ணைக் கொண்டு பல தகவல்களை போலீசார் திரட்டியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் திருச்சியில் 60 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

POLICE, TAMILNADU