'பெண்களை' வலையில் 'வீழ்த்தி' வீடியோ.. 'பணம்' பறிப்பு.. 'சிக்கிய' முகநூல் ரோமியோவின் 'லேப்டாப்'! சூடுபிடிக்கும் இன்ஜினியர் 'சுஜி' வழக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரும் இறைச்சி கடை உரிமையாளரின் மகனுமான காசி என்கிற சுஜி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பல போலி கணக்குகளில், தன்னைத் தொழிலதிபர், சமூக சேவகர் என்றெல்லாம் காட்டிக்கொண்டு, தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்கு கமென்ட், லைக் போடும், நன்கு படித்த, வசதி படைத்த பெண்களைக் குறிவைத்து நட்பாக்கிக் கொண்டுள்ளார்.
அவர்களின் கருத்துக்கு ஒன்றிய கருத்துக்களை தமது வலைப்பக்கங்களில் பதிவிட்டு, அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பின்னர் காதலின் பெயரால் உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும் நெருங்கிப் பழகுவார். ஒரு கட்டத்தில் திடீரென அவர்களுடன் பேசுவதை நிறுத்திக் கொள்வார் இந்த சிக்ஸ் பேக், ஜிம் பாடிக்காரர். உடனே பதறி அடித்துக்கொண்டு, “ஏன் என்னுடம் பேச மாட்டீங்குறீங்க” என்று மீண்டும் தன் பின்னால் வரும் பெண்களே இவரது டார்கெட். அப்பெண்களுடன் மேலும் பழகி, அப்போது எடுத்து வைத்துக்கொள்ளும் புகைப்படங்களை வைத்துக் கொள்வார். பின்னர் அவர்களுக்கு போன் செய்து, “உங்கள் புகைப்படங்களை இணையத்தில் பரப்பி விடுவேன்” என்று கூறி அவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். அப்படித்தான் பெண் மருத்துவர் ஒருவரிடம் பழகி, தனது மாமாவின் சிகிச்சைக்குப் பணம் வேண்டும் எனக்கேட்டு, அப்பெண் மருத்துவரிடம் பணம் வாங்கியதோடு, அப்பெண்ணின் வங்கிக்கணக்கில் இவரது மொபைல் எண்ணை இணைக்கும் அளவுக்கு சென்றுள்ளார் இந்த காசி என்கிற சுஜி. ஆனால் அந்த பெண் மருத்துவர் சுஜியின் மொபைலை எதார்த்தமாக பார்த்துவிட, அதில் சுஜி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்ததோடு, அதுகுறித்து சுஜியிடம் கேட்க, சுஜியை மிரட்டியுள்ளார். மேலும் சுஜியிடம் அவருடனான நெருக்கமான புகைப்படங்களைக் காண்பித்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆனாலும் அந்த பெண் மருத்துவரின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை தனது போலி இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் சுஜி பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் மருத்துவர், இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்துக்கு புகார் அனுப்ப, எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் கோட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த 26 வயது காசி என்கிற சுஜியை கைது செய்தனர். இந்நிலையில், காசி மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் ஏமாற்றபட்ட பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்தின் தனிப்பட்ட தொடர்பு எண்ணான `9498111103’ தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் புகார் தெரிவிப்பவரின் ரகசியம் முழுமையாகக் காப்பற்றப்படும் என்றும் பொலீஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசிய ஏ.எஸ்.பி ஜவஹர், காசி என்கிற இந்த இன்ஸ்டாகிராம் மோசடி ரோமியோ சுஜியின் லேப்டாப் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதை அன்லாக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திரட்டும் முயற்சி நடந்து வருவதாகவும், அதுமட்டுமல்லாமல் இவரது வலையில் வீழ்ந்து, இவருடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் சூடுபிடித்திருக்கிறது சுஜியின் வழக்கு. பொள்ளாச்சி பாலியல் வழக்கையே மிஞ்சும் அளவுக்கு தமிழ்நாட்டை அதிரவைத்துள்ளது காசி என்கிற சுஜியின் வழக்கு.