ஒரு நாளைக்கு 4500 பேரா.?.. தமிழகத்தில் வேகமெடுக்கும் MEDRAS EYE .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன ?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மழைக் காலம் தற்போது தொடங்கி உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கண் வெண்படல அழற்சி எனப்படும் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது.

ஒரு நாளைக்கு 4500 பேரா.?.. தமிழகத்தில் வேகமெடுக்கும் MEDRAS EYE .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன ?

Also Read | "வீடியோ கேம் மாதிரி இருக்கே".. சூர்யாகுமார் பேட்டிங் பாத்துட்டு கோலி கொடுத்த ரியாக்ஷன்.. பதிலுக்கு SKY சொன்ன வைரல் பதில்!!

இதன் காரணமாக, ஒரு நாளைக்கு சுமார் 4,500 பேர் வரை சராசரியாக மெட்ராஸ் ஐ நோய் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக பேசும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இது விரைவாக பரவும் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

TN people affected for madras eye precaution says minister ma subraman

மெட்ராஸ் ஐ நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். யாருக்கும் இதுவரை கண் பாதிப்பு ஏற்படவில்லை. மெட்ராஸ் ஐ மூலம் பாதிக்கப்படும் நபர்கள், மற்றவர்களிடம் தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது" என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதே போல, மெட்ராஸ் ஐ மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள், மற்றவர்கள் பயன்படுத்தும் பொருளை பயன்படுத்த வேண்டாம் என்றும், வெறுங்கண்ணால் மற்றவர்களை பார்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், சிறந்த முறையில் தங்களை கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN people affected for madras eye precaution says minister ma subraman

தமிழகத்தில் வேகமாக மெட்ராஸ் ஐ நோய் பரவி வருவது தொடர்பான விஷயம் மக்கள் மத்தியில் அதிக பதற்றத்ஜை உண்டு பண்ணி வரும் நிலையில், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "தாய் பாசத்துக்கு எதுவும் ஈடாகாது".. சூர்யகுமார் செஞ்சுரி அடிச்சதும் அம்மா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

TAMILNADU PEOPLE, MADRAS EYE, MINISTER MA SUBRAMANIAM, MADRAS EYE PRECAUTION

மற்ற செய்திகள்