'பள்ளிகளை திறப்பது எப்போது'?... 'அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளிகளைத் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என, பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

'பள்ளிகளை திறப்பது எப்போது'?... 'அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. கடந்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்பு தன்மையைப் பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தச்சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் இந்த ஆலோசனை பெற்றோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்