"'கொரோனா' எல்லாம் போயே போச்சு!!!" - குணமாகி, மீண்டும் ‘களத்தில்’ இறங்கும் தமிழக 'அமைச்சர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முன்னாள் அமைச்சர் வளர்மதி, தற்போதைய அமைச்சர்கள் கே.பி அன்பழகன், தங்கமணி, நிலோபர் கபில் என அமைச்சர்கள் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர். அதே போல, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து சிகிச்சைக்காக கடந்த எட்டாம் தேதி, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
LATEST VIDEOS