"முதல்வர பத்தி தேவையில்லாம பேசுனா, அப்போ இருக்கு உங்களுக்கு..." 'திமுக'வை எச்சரித்த 'ராஜேந்திர பாலாஜி'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்த போது, திமுக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தங்கள் மீது தெரிவிப்பதாக கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை குறிப்பிட்டு திமுக கொள்ளையடித்த கட்சி என்றும் தெரிவித்திருந்தார்.

"முதல்வர பத்தி தேவையில்லாம பேசுனா, அப்போ இருக்கு உங்களுக்கு..." 'திமுக'வை எச்சரித்த 'ராஜேந்திர பாலாஜி'...

இதனையடுத்து திமுக எம்.பி ஆ. ராசா, முதல்வரின் கருத்திற்கு பதில் தெரிவிக்கும் வகையில், 2 ஜி வழக்கு குறித்து அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் கோட்டையில் வைத்து என்னுடன் விவாதிக்க தயாரா? என கேட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2 ஜி வழக்கு குறித்து முதல்வர் ஏன் பேச வேண்டும், நானே வருகிறேன் என பதில் கூறினார்.

ராஜேந்திர பாலாஜியின் கருத்திற்கு திமுக சார்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவரது உருவ பொம்மையை திமுக எரிக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், ராஜேந்திர பாலாஜி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'முதலமைச்சரை குறை கூற ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் சுற்றுப்பயணம் செய்கிறார். மக்களை பற்றி சிந்திக்கக் கூடியவர் முதல்வர். அப்படிப்பட்ட முதல்வரை யார் விமர்சித்தாலும் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

திமுகவிற்கு சகுனம் சரியில்லை. தன்னை விளம்பரப்படுத்த 350 கோடி வரை ஸ்டாலின் செலவிட்டுள்ளார். தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் ஏமாளி ஆகப் போகிறார். திமுக தமிழக மக்களுக்காக எதையும் செய்ததில்லை. 2 ஜி ஊழல் செய்த ஆ. ராசா, திகார் சிறையில் இருந்தார். அனைவருக்கும் மரியாதை அளிப்பவன் நான். எங்களது தலைவரை மரியாதையாக பேசினால் நாங்களும் மரியாதையாக நடந்து கொள்வோம். மாறாக, நீங்கள் தரக்குறைவாக பேசினால், திமுக ஸ்டாலின், ராசா ஆகியோர் வெளியில் செல்ல முடியாத அளவு விளைவுகளை சந்திக்கக் கூடும்'

மற்ற செய்திகள்