“4வது தமிழக அமைச்சருக்கு கொரோனா!”.. ஏற்கனவே 3 அமைச்சர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவைப் பொருத்தவரை தலைவிரித்தாடும் கொரோனாவால் அனைவருமே வீட்டிலேயே முடங்கி உள்ள நிலை இன்னமும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்த போதிலும் நோய்த் தொற்று பரவும் விதம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், 4-வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சென்னை வந்த இவர் சில நாட்களாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார். இதில் கடந்த 14ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை.
பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ கண்காணிப்பிலும் இருந்து வருகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் மற்றும் மருமகன் உள்ளிட்டோருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS